எந்த நகருக்குப் போனாலும்,அல்லது எந்த நாட்டுக்குப் போனாலும் ஹோட்டலில் தங்குகிறபோது எதையாவது லவட்டுவது சிலரது பழக்கம்.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகையான தீபிகா படுகோனே வுக்கு ஒரு பழக்கம். தங்குகிற ஹோட்டலில் இலவசமாக வழங்கும் ஷாம்பூ பாட்டில்களை எடுத்துக் கொண்டு போய் விடுவார், அவரது வீட்டில் அந்த பாட்டில்களை அடுக்கி வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.
சிலர் விமானத்தில் வழங்குகிற மதுபான பாட்டில்களை எடுத்துக் கொண்டு வந்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். நடிகர்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.