வேல் பிலிம்சின் ‘கோமாளி’ பட முன்னோட்டம் வெளிவந்த பிறகு ரஜினி ரசிகர்கள் தங்களின் மனவருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் அவரது வருத்தத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்சிடமே பதிவு செய்து விட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி இருந்தார்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து முன்னோட்டத்தில் காட்டப்பட்ட காட்சிகளில் வருடங்களின் வித்தியாசம் முரண்பட்டிருந்தது.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கிண்டலடித்தது மாதிரியும் இருந்தது. இந்த காட்சியை எடுத்து விடுங்கள் என சிலர் கோரிக்கையும் விடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கல்வியாளரும் திரைப்படத்தயாரிப்பாளரும் நடிகர் சங்கத்தின் வில்லங்கத்திற்கு விதை போட்டவருமான ஐசரி கணேசிடம் கேட்டபோது அமைதியாக பதில் சொன்னார்.
“நான் ரஜினிசாரின் ரசிகன். அவருடன் நடித்திருக்கிறேன். முன்னோட்டத்தில் வருகிற காட்சி ரஜினி ரசிகர்களை வருத்தமடைய செய்யுமானால் அந்த காட்சி படத்தில் இருக்காது” என உறுதி அளித்தார்.