“யார் இவன் ‘ படத்தில் நடித்த நடிகைதான் ஈஷா குப்தா. மிஸ் பெமினா.அழகி பட்டம் வாங்கியவர்.
படத்தைப் பார்த்து வயதை சொல்ல முடியாது என்றாலும் இவரது வயது 34.
ஆனால் கவர்ச்சியில் சுனாமி.
கருத்து சொல்வதில் சூறாவளி !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
கவர்ச்சியாக இருப்பவர் கருத்துச் சொல்லக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா? இல்லை.!
அவர் சொல்கிறார்:அது தப்புன்னு நினைச்சா படித்து விட்டு சொல்லுங்க.
“மூணு வயது பெண் குழந்தையை கடத்திட்டுப் போயி கூட்டமா சேர்ந்து பாலியல் வன்முறை செஞ்சிருக்காங்க. மும்பையில் ஒரு அக்கிரமம் 19 வயசுப் பொண்ணு பிறந்த நாள் கொண்டாடும் போது அவளைத் தூக்கிட்டுப் போயி கற்பழிச்சிருக்கானுக!
‘பாரத் மாதா கி ஜெய்’னு முழங்குறோம்.ஆனா பெண்களுக்கு செய்யப்படும் கொடூரங்கள் குறையலியே! இனிமே யாரும் பெண் குழந்தையே பெத்துக்கக் கூடாதுங்க,!”
ஈஷா குப்தா சொல்றது தப்பா?