சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் இன்று காலை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இது சிம்புவின் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பலரும் சுரேஷ் காமாட்சியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது கருத்தினை பதிவு செய்திருந்தனர்.
இது குறித்து சிம்பு எதுவும் வாய் திறக்காத நிலையில்,இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில், “சகோதரர் சிம்புவுடன் எதிர்பாராதவிதமாக பணிபுரியமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியது சரியான முடிவு என்றும்,தயாரிப்பாளரின் பொருளாதார நிலவரத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட்பிரபுவின் பதிவு சிம்பு வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது