“அமித்ஷா யார் என்பது இப்போது புரிந்திருக்கும்” என்று அமித்ஷா முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது!
அந்த வார்த்தைகள் யாரை நோக்கி பாய்ந்திருக்கும் மு.க.ஸ்டாலினையா ?
அல்லது அதன் கூட்டணி கட்சிகளையா?
“இப்போது புரிகிறதா என்கிற கேலி,அல்லது எச்சரிக்கை அதில் புதைந்திருப்பது மறை பொருள் என்கிறார்கள். தீராத காஷ்மீர் பிரச்னையையே ஒரே நாளில் முடித்து வைத்தவருக்கு திமுக கூட்டணியை முறியடிக்க முடியாதா என்ன?
இந்திய துணைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக விழாவுக்கு சென்னை வந்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டிருந்தாலும் ஏனோ தெரியவில்லை .ரஜினிக்கு கிடைத்த முக்கியத்துவம் பழனிச்சாமிக்கு கிடைக்கவில்லை.
ரஜினி பேசுகையில் காஷ்மீர் பிரச்னையில் அமித்ஷா எடுத்த முடிவை வெகுவாகப் பாராட்டினார்.
“மோடியும் அமித்ஷாவும் அர்ஜுனன்,கிருஷ்ணன் போன்றவர்கள்.அவர்களில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது.அந்த இருவருக்கு மட்டுமே தெரியும்.மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.அமித்ஷா யார் என்பது இப்போது தெரிந்திருக்கும்.
நாடாளுமன்றத்தில் காஷ்மீர் தொடர்பாக அவர் பேசிய பேச்சு பிரமாதம்.மிஷன் காஷ்மீரை சாத்தியப் படுத்திய விதத்துக்கு ஹாட்ஸ் ஆப்” என்றார் ரஜினி.
தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்ட மன்றத்தேர்தல் கவுரவர்-பாண்டவர் இடையில் நடந்த பாரத யுத்தத்தை நினைவுபடுதப்போகிறதா?? இதில் கிருஷ்ணன், அர்ஜூனன் பங்கெடுப்பு இருக்கும் என்பதுதானே மறை பொருள்?
துணைக் குடியரசுத் தலைவர் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தும் இந்த விழாவை அவருடைய தாயகத்தில் நடத்தாமல் சென்னையில் நடத்தியதற்கான காரணம் தி.மு.க.வை அச்சுறுத்த வேண்டும் என்பதே என்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக அணி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காகவே ரஜினியை இந்த விழாவிற்கு அழைத்திருக்கலாம்.
“பா.ஜ.க,.வின் கதவு ரஜினிக்காக திறந்தே இருக்கிறது “ என முன்னர் அமித்ஷா பேசியதையும் நினைவு படுத்துகிறார்கள். பாஜக.அதிமுக அணியில் ரஜினியின் புதிய கட்சி சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அது சாத்தியமே என்கிறார்கள்.