
விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும்.
அதாவது மத்தியில் அமைந்துள்ள அரசு தமிழர் விரோத எதிர்ப்பை கடைப்பிடிப்பதால் அந்த நிலை வரலாம் என்பது கவிஞரின் எதிர்பார்ப்பு.
இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘இந்தப்படம் தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார்.

நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. . விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.
விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார்.












