
கிட்டத் தட்ட எண்பது ஆண்டுகால கன்னட திரைப்பட சரித்திரத்தில் புராண படங்கள் எடுக்கப்பட்டதில்லையாம். ஆச்சரியமான இந்த தகவலை சொன்னவர் கன்னட படத்தயாரிப்பாளர் முனிரத்னா.
இதிகாசமான மகாபாரத கதையில் துரியோதனனை மைய்யமாக வைத்து முதன் முதலாக 3 D படமாக ‘குருசேத்திரம்’எடுத்திருக்கிறார்.
இன்று பாடல் காட்சிகளையும் முன்னோட்டத்தையும் கலைப்புலி தாணு வெளியிட்டார். தமிழகத்தில் வெளியிடும் உரிமை தாணுவுக்கு.!
150 கோடி செலவில் இரண்டு வகையாக எடுத்திருக்கிறார்கள். த்ரி டி ,டு டி என இரு விதமாகவும் பார்க்க வசதி. ஆனால் இரண்டுக்கும் காட்சிகளில் வித்தியாசம் இருக்கும்.
துரியோதனன் கதையின் நாயகனைப் போல வருவதால் அவனது அரண்மனை மிகவும் பிரமாண்டமான அரங்குகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. அவனும் ஒரு சக்கரவர்த்தியைப் போல இருக்கிறான். ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் காண முடியாத பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கிறது.
இந்த கதையில் கர்ணனாக அர்ஜுன், திரவுபதியாக சினேகாவும் வருகிறார்கள்.












