
எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைவர்க்கும் வழங்கிப் பேசினார்.
முன்பு 3 பவுனில் கொடுத்தார்கள். இனி 5 பவுனில் கொடுக்கப்படும் என்கிற மகிழ்ச்சிகரமான செய்தியை சொன்னார்.
தங்கம் விற்கிற விலையில் இந்த அறிவிப்பு வந்தது மிகவும் ஆறுதலாக இருந்திருக்கும்.
இந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய சேதுபதி, கவிஞர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
கலந்து கொள்ளவில்லை என்றால் புறக்கணிப்பு என்று செய்தியை தட்டி விட வேண்டியதுதானே…அதுதான் நடந்தது.
ஆனால் விஜயசேதுபதி படப்பிடிப்பினை முடித்து விட்டு சென்னை போக்குவரத்து நெரிசலை கடந்து மேடைக்கு வருவதற்குள் விழா முடிந்து விட்டது.
ஆனால் இயல் இசை நாடக சங்கத்தலைவர் தேவா அங்கிருந்தார்.இந்த அமைப்புத்தானே விருதுகளை வழங்குகிறது.
விஜயசேதுபதி வருவதற்கு தாமதமான காரணத்தை தேவாவிடம் சொன்னதும் அவர் அரசு அதிகாரிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் கலைமாமணி விருதினை பெற்றுக் கொண்டிருக்கிறார்.இதுதான் உண்மை.!
யுகபாரதி ஊரில் இல்லாத காரணத்தால் அவரது உதவியாளரிடம் அனுமதி சீட்டினை கொடுக்குமாறு கேட்டதற்கு முடியாது என்று மறுத்து விட்டார்களாம். சம்பந்தப்பட்டவரே நேரில் வரவேண்டும் என சொல்லப்பட்டதால் அவரால் உடனடியாக ஊரில் இருந்து வர இயலவில்லை.












