டெல்லி காங்கிரஸ் கட்சி ஆபீசில் ப.சிதம்பரம் பேட்டி கொடுத்தபோது சி.பி.ஐ.போலீசுக்கு போதிய வாய்ப்பு இருந்தும் சுவர் எறிக் குதித்துக் கைது செய்தது அவரின் பெயரை டேமேஜ் பண்ண வேண்டும் என்பதுதானே!
இப்படித்தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்..
ஏறத்தாழ முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை ஜெ.ஆட்சியில் நள்ளிரவு கைது செய்த அராஜகம் போன்றதுதானே ப.சி.கைதும்.!
பாஜக அரசுக்கு காங்கிரசை இழிவுபடுத்தி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வர வேண்டும், பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பை மக்கள் மறக்கவேண்டும், வேலை வாய்ப்பிழந்தவர்களின் செய்திகளை பத்திரிகைகள் பெரிது படுத்தாமல் இருக்கவேண்டும் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ,சர்வதேச அளவில் பெயர் பெற்றவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் என்பது தெளிவாக புரிகிறது.
நேற்று இரவு முழுவதும் டெல்லி அரசியல் வட்டாரமே பரபரப்புடன் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து விசாரணைக்காக சிதம்பரம் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ப . சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்.
10 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தற்போது சிதம்பரத்தை கைது செய்தது ஏன் என அவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து சிதம்பரம் கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உடனடியாக ஜாமீன் வழங்குமாறும் வாதிட்டனர்.
இதையடுத்து ப . சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை . அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டியது உள்ளது என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொ
பின்னர் சிபிஐ கேட்டப்படி வரும் 26-ம் தேதிவரை 5 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.. விசாரணைக்குப்பின் வரும் திங்கட் கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுவார்.