வந்ததும் தெரியல போனதும் தெரியல..கோமாளிக்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடி விட்டார்கள்.
“நான் ரஜினியின் ரசிகன் “என சொல்லிக் கொண்டே சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகையை அந்த படத்தில் நக்கலடித்திருந்தார்கள். ரசிகர்களின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.
அவர்களின் அடுத்த படமான பப்பி ( நாய்க் குட்டி.) என்கிற படத்தின் முதல் போஸ்டரில் காமடியாக வைத்திருந்த காட்சிகளும் போலீஸ் புகாராக மாறியிருக்கிறது.வம்பே சரணம்பா!
யோகிபாபு,வருண் இருவரும் நெருக்கமாக இருந்தபடி ஒரு படத்தைப் பார்க்கிறார்கள். இருவர் தோள் மீது ஒரு நாய்க்குட்டி அமர்ந்திருக்கிறது. சுவரில் ஒரு பக்கத்தில் ஆபாச பட நடிகர் ஜானியும் இன்னொரு பக்கத்தில் நித்யானந்தாவும் போட்டோவாக சிரிக்கிறார்கள். இவை எல்லாமே புகைப்படம் இல்லை. வரையப்பட்டது.யோகிபாபு ,வருண் வைத்திருக்கும் படத்தின் பின்பக்கத்தில் எழுத்து இயக்கம் மொரட்டு சிங்கிள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த படம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று இந்து அமைப்புக் கட்சியை சேர்ந்த செல்வம் என்பவர் போலீசில் புகார் செய்திருக்கிறார். இந்து மதத்தின் புகழ் பரப்பியாம் நித்தி.
அட தேவுடா! ரொம்பத்தான்யா ஆடுறீங்க!