தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு இன்று 67 -ஆம் ஆண்டு பிறந்த நாள் .
காலையில் மங்களகரமான திருமணத்தை நடத்திவிட்டு இன்று தொண்டர்களை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.
அவரைத் தனியாக சந்தித்து வாழ்த்துகளை சொல்லிவிட்டு வந்தேன்.
மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அரசியல் பார்வை கூர்மையாகவே இருக்கிறது.
நினைவாற்றல் குறைந்து விட்டது என சொல்வதெல்லாம் அவதூறு.
சேத்துமடை படப்பிடிப்புத் தளத்துக்கு நானும் சில பத்திரிகையாளர்களும் சென்றிருந்ததை நினைவு படுத்திக் கொண்டு வாய் விட்டு சிரித்ததைப் பார்த்தபோது இந்த சிங்கம் எதையும் மறக்கவில்லை,மறக்காது என்பது புரிந்தது.
நடப்பு அரசியலில் அவரது கோபம் தி.மு.க. மீது !
தேமுதிக வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டவைகளில் சிலவற்றை சில மாநில அரசுகள் பின்பற்றுவதை சுட்டிக் காட்டினார். தனது மனைவி பிரேமலதாவின் அரசியல் கண்ணோட்டம் சரியானது என்பதை சில உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.
அவர் திடமாகத்தான் இருக்கிறார்.
அவர் வலிமையும் நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ இறையருளை வேண்டுகிறேன்.
அன்புடன்,
தேவிமணி