குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கருத்தரங்கு இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது.
இதில் நடிகை திரிஷா கலந்துகொண்டு பேசினார்.
“பெண் குழந்தைகள் கல்வி பயில்வது தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகளின் உரிமை குறித்து விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகரிக்கவேண்டும் .
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை களைய அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.
அரசியல் புரிதல் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் தேவை… ஏன் என்றால் நீங்கள் தான் நாளைய தலைவர்கள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்க தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்
கிராமப்புறங்களில் தற்போது திறந்தவெளி கழிப்பிடங்கள் குறைந்துள்ளன.
நடிகர் அஜித் , பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது வரவேற்கத்தக்கது. நடிகர் அஜீத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறி இருக்கிறார்.