சிம்புவுக்கு ரசிகர்கள் பலம் அதிகம்.
படங்கள் சொதப்பினாலும் நடிப்பை ரசிப்பதற்கு தமிழகத்தில் அதிகமாகவே இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இது சிலம்பரசனின் பிளஸ்.
ஆனால் சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு சிம்புவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி,திரை வாழ்க்கையிலும் சரி விரும்பத் தகாத மாற்றங்கள்.
அது காதலிகளா,நட்பு வட்டமா ?
ஏதோ ஒன்று.
தற்போது சிம்புவின் மீதான கவலை,அக்கறை எல்லாமே அவரது பெற்றோர் வசமாகி விட்டது.
முடிவெடுப்பதில் 75 சதம் அவரது பெற்றோர் என்கிறார்கள்.
இதே நேரத்தில் சிம்புவின் மீது தயாரிப்பாளர்களுக்கு இருந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்திருக்கிறதா?
கவலைப்படுகிறார்கள் !
“ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வேலை பார்த்தார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ,பெரும்பாலும் அப்படித்தான். இதை அவரின் பெற்றோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர்களோ ஒரு நடிகர் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை தங்களின் மகன் மூணு மணி நேரத்தில் முடிக்கிறானே என்றுதான் சொன்னார்களே தவிர முடிவுக்கு வருவதாக இல்லை.
ரஜினி,கமல் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு பத்து மணி நேர வேலையை எப்படி மூணு மணி நேரத்தில் முடிப்பது என்பது பற்றி சிம்புவை வைத்து வகுப்பு எடுக்கலாமா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் “என தனது கோபத்தை ‘சினிமா முரசம்’ செய்தியாளரிடம் இறக்கி வைத்தார்.
அவர் சொன்ன இன்னொரு தகவல் இன்னும் ஷூட்டிங் நடக்காமலேயே பல கோடிகளை செலவு செய்திருக்கிற தயாரிப்பாளரை பற்றியது.
அவரிடம் தான் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இது நல்லதுக்குத்தானா ?