பிகில் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் இன்று வெளியானது.
இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது .
இப்பாடலில் இடம் பெற்றுள்ள,”எங்க வந்து யாராண்ட வச்சுகினே நீ பிரச்சனை,”அவன் வர்ற வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுறுது; அவன் எழுந்து கிழுந்து வந்தானா இந்த தீபாவளி நம்பள்து” என்கிற வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறி வைத்து எழுதப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏற்கனவே ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் விவாதத்தை கிளப்பியபோது,”ஏன்,விஜய் ஒரு தமிழன் தானே?விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா”
என பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஒரு கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது சீமானும் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன் எனக்கூறியுள்ளதும் பரபரப்பாக பேசப்படுகிறது.