சிங்காரித்து மூக்க அறுத்திட்டிங்களேடா பாவிகளா என நொந்து நூடுல்ஸ் ஆகி வெளிநடப்பு செய்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.
தெலுங்கு திரைப்பட நிர்வாகிகள் சங்கத்தின் சில்வர் ஜூபிலி விழா சினி மகோத்சவம் என்கிற பெயரில் நடந்தது.
விழாவில் ரகுல்பிரீத்,ராசி கன்னா,பூஜா ஹெக்டே ஆகிய மூவரது நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ரகுலை காக்க வைத்துவிட்டு மற்ற இரண்டு பேரையும் ஆட விட்டிருக்கிறார்கள்.
ஆட கூப்பிடுவார்கள் என அதுவரை காத்திருந்த ரகுல் பிரீத் சிங்குக்கு ஏமாற்றம்.
சிறப்புரை நிகழ்த்த சிரஞ்சீவி அழைக்கப்பட்டதும் காண்டாகி விட்டார் ரகுல்.
சொல்லாமல் கொள்ளாமல் மேக் அப்பையும் கலைக்காமல் அப்படியே காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்று விட்டார்.
அடப்பாவிகளா,சிங்காரம் செய்து மூக்கை அறுத்திருக்கிறீர்களே!