தமிழ்ப் புலவர் என்கிற செல்லப்பெயர் நமது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு உண்டு.
அவரை கிரிக்கெட் வட்டாரத்தில் பஜ்ஜி என செல்லமாக அழைப்பார்கள்.
அவருக்கு தமிழ் மீது காதல் .கற்றுக் கொண்டிருக்கிறார். டிவீட் செய்யும் அளவுக்கு தமிழ் ஆற்றல் உண்டு.
அவர் நடிகர் ஜீவி.பிரகாஷின் ஏழாவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளை வெளியிடுகிறார்
இதைப்பற்றி இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
“தமிழ்ப்புலவர் பராக்..பராக்!டிவிட்டர் உலக டான் சென்னை ஐ பி.எல் டீமின் செல்லப்பிள்ளை ஹர்பஜன் சிங் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்.எங்களுக்குப் பெருமை.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.