இன்றைய பிக் பாசில் உருக்கம் பெருக்கெடுத்தது.
முதலில் லாஸ்லியாவின் அம்மாவுடன் சகோதரிகளும் வந்தார்கள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் ?
மெய்யாகவே லாஸ்லியா கரைந்து போனார். உணர்வுகள் பிரளயமாக உருவாகியது.சில நிமிடம் கண்ணீரில் கரைந்தது.
“நீ நீயா இரு !தனியா இருந்து விளையாடு!”என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தபோது கவின் பக்கமாக கேமரா திரும்பியது. அவரது முகம் தொங்கிப் போயிருந்தது.தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாட்டு கேட்டதும் லாஸ்லியா உடைந்து போனார்.கதறினார்.அது அப்பாவின் வருகைக்கான பாட்டு என்பதை உணர்ந்து.
வந்தவர் அவ்வளவாக மகள் மீது தொடக்கத்தில் அன்பு காட்டவில்லை.
“உன்னை அப்படியா நான் வளத்தேன்.நீ வரும்போது என்ன சொல்லி வந்தாய்?உன்னை நான் அப்படி வளக்கலியே!நமக்கு காசா தேவை. பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன் தலை நிமிந்து வாழ்ந்தவன் .
ஊருக்குள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? ஏன் முன்னாலேயே அப்படி பேசுறவங்க எனக்குப் பின்னால் என்ன பேசுவாங்கள்? கேமை கேமாக விளையாடு!” என அட்வைஸ் பண்ணினார். பின்னர் கவின் உள்பட எல்லோரையும் சந்தித்து கை குலுக்கு கிறார்.
ரகசிய அறைக்குள் இருந்து வந்த சேரனுக்குத்தான் எல்லாச் சிறப்புகளுமே!