“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தனுக்கா கொடுத்தான்? அவன் ஊருக்காகக் கொடுத்தான் “என்று புரட்சித் தலைவர் பாடியது சரியாகிப் போய்விட்டது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஒருவர் படம் எடுத்தால் அது உருப்படியாக வளர்ந்திருக்கலாம் .
ஆளுக்காள் எடுப்பதாக சொல்லிவிட்டு இப்போது பின் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். மொத்தம் மூணு பேர் படம் எடுக்கப்போவதாக சொன்னார்கள். ஒருவர் வெப் சீரிஸ் என பின்வாங்கி விட்டார். த அயர்ன் லேடி கதை என்ன ஆகப்போகிறதோ?
ஜெ.வின் அண்ணன் தீபக்கிடம் முறைப்படி அனுமதி வாங்கி ‘தலைவி’ படத்துக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். இயக்குனர் ஏ.எல் விஜய் பாகுபலி கதாசிரியரிடம் கதை உருவாக்கத்தை விட்டிருந்தார்.
ஜெயலலிதாவாக நடிப்பதற்கு வட இந்திய நடிகை கங்கனா ரனாவத்தை ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார். மும்மொழிப் படமாக வருகிறது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் படம் தற்போது உடனடியாக தயாரிக்கப்பட மாட்டாது என தெரிகிறது.
படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி. ( பத்துமா தலைவி?) இதில் கங்கனாவின் சம்பளம் 20 கோடி.
மீதிப் பணத்தில் சொப்பு வைத்துதான் விளையாட முடியும்.
இதனால் படப்பிடிப்புத் தள்ளிப் போகிறது என்கிறார்கள்.