ஏதாவது ஒரு நிகழ்ச்சி. மந்திரி பிரதானிகள் போகிறார்கள் என்றால் பிளாட்பாரத்தை மறைத்து பேனர்கள்.பிளக்ஸ் போர்டுகள் வைத்து தங்களின் விசுவாசத்தைக் காட்ட கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள்.
அதன் விளைவு பல உயிரிழப்புகள். சாலை விதி மீறல்கள்,என அடிக்கடி நிகழல்.
இதை சென்னை உயர்நீதிமன்றம் பல முறை கண்டித்தும் அரசு,அதிகாரிகள் கேளா செவியினராகவே இருந்து வருகிறார்கள்.
இன்று முற்பகல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது.
சாலையில் பைக்கில் சென்ற சுப ஸ்ரீ மீது பேனர் விழுந்தது . தடுமாறி கீழே விழுந்த சுப ஸ்ரீ மீது லாரி ஏற அந்த இடத்திலேயே இறந்து போனார்.
போலீசார் பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைத்தனர். பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆக அவர்கள் பணி அத்துடன் முடிந்தது.
ஆனால் இந்த பிரச்னையை உயர்நீதி மன்றத்தின் கவனத்துக்கு வழக்குரைஞர் லட்சுமி நாராயணன் கொண்டு சென்றார்.
நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
“மனித உயிருக்கு மதிப்பில்லையா?
அதிகாரிகளுக்கு தெரியாதா?மெத்தனமாக இருப்பது ஏன்?
இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் குடிக்க விரும்புகிறார்கள்?
எத்தனை உயிர்களை பலி வாங்க நினைக்கிறார்கள்?
சட்ட விரோத பேனரில் எத்தனை உத்திரவுகள் பிறப்பித்தாலும் இது போன்றே நடக்கிறது.உயிரிழப்புக்கு 2 லட்சம் கருணைத் தொகை கொடுத்தால் தீர்ந்து விடுவதாக நினைக்கிறார்களா?”
இப்படியெல்லாம் நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் ,அரசியல்வாதிகளுக்கும் சொரணை இருக்கிறதா?