
தமிழக தணிக்கைக் குழுவுக்கு அதிகாரியாக இருப்பவர் ஒரு பெண்.
பெருமைதான்! அதிலும் அவரது பெயரில் மதுரை அங்கையர்க்கண்ணி அம்மையே இடம் பெற்றிருக்கிறாள்.
லீலா மீனாட்சி. தணிக்கைக் குழுவின் ஆளுமை மிக்க அதிகாரி என்கிற சிறப்பும் உண்டு.
அதாவது தமிழகத்தின் கலாச்சாரத்தை குறிப்பாக பெண்மையின் உயர்வை காப்பாற்ற வேண்டிய கடமை இவருக்கு இருக்கிறது.
அண்மையில் வெளிவந்த ஒரு அடல்ட் காமடி படத்தில் அந்த படத்தின் தன்மைக்கேற்ப ‘ எ ‘சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். சரி.!
ஆனால் ‘எ’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுவிட்டதால் ஆண்களும் முகம் சுழிக்கும் காட்சிகளை அனுமதிக்கலாம் என விதி சொல்கிறதா?
ஒரு ஆணின் அந்தரங்கப் பகுதியில் கயிறைக் கட்டி அந்த கயிற்றை இரண்டு புள்ளிகள் வழியாக கைத் துப்பாக்கியில் இணைத்து “அங்கே டெம்பரானால் “என்ற சொல்லை பயன் படுத்தி காட்சிப் படுத்தியிருப்பார்கள். அந்த வசனத்தை நம்மால் முழுமையாக எழுத முடியவில்லை.
இப்படி அந்த படத்தில் பல இடங்களில் வசனங்கள் காட்சிகள் இருக்கின்றன.
மற்றொரு வருத்தம் .
நாதாரி என்ற சொல் மதுரைப் பக்கமாக வசிக்கிற ஒரு இனத்தவரை குறிக்கும் என சொல்லி அதை தணிக்கைக்குழு முன்னர் தடை செய்திருந்தது. அந்த விதி,அல்லது தடை தளர்த்தப்பட்டு விட்டதா?
–தேவிமணி












