
இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குகிற நடிகர்களில் முதலிடம் சல்மானுக்குத்தான்!
இன்னும் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி .கன்னித்தன்மை உள்ள மனுசனா என்பதெற்கெல்லாம் உத்திரவாதம் தரமுடியாது.
1998-ஆம் ஆண்டு இரண்டு மான்களை வேட்டையாடியதாக வழக்கு. கிட்டத்தட்ட 21 வருஷம் ஆச்சப்பா.! வழக்குத்தான் முடிந்த பாடாக இல்லை.
சல்மானுடன் சேர்ந்து இந்த வழக்கில் சயீப் அலிகான்,சோனாலி பெந்த்ரே,தபு,இன்னும் பல கூட்டாளிகள் இருக்கிறார்கள்.
மானை எதுக்காக சுட்டு இருப்பாங்க?
கூட்டாஞ்சோறு சாப்பிடுறதுக்கா?
இந்த வழக்கு இழுத்துக்கிட்டு இருக்க சல்மானுக்கு முகநூலில் ஒரு மிரட்டல்.
சிவப்பு கிராஸ் போட்டு! கேரி ஷூட்டர் என்கிற பெயரில் கொலை மிரட்டல்.! அதாவது இவர்கள் 007 என்கிற குரூப்பினை சேர்ந்தவர்களாம்..
காவல் துறை கண்ணில் கண்ட எண்ணைகளை ஊற்றிக் கொண்டு யார் அவர்கள் என்பதை தேடி வருகிறது.












