எந்த ஆங்கிளில் எப்படி போட்டோ எடுத்தார்களோ,வீடியோ பதிவு செய்தார்களோ அது வில்லங்கத்தை விலையில்லா பரிசாக கொண்டு வந்து விட்டது.
“நடிகை ஊர்வசி ரத்தேலாவை தொடக் கூடாத இடத்தில் போனிகபூர் தொட்டு விட்டது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது. அது தோற்றப் பிழையே தவிர உண்மை இல்லை.ஆனால் மீடியாக்கள் அதை வைரலாக்கி விட்டன.
அந்த செய்தி உண்மை இல்லை என்கிறபோது அதற்கேன் விளக்கம் என இருவருமே அமைதியாகி விட்டனர்.
ஆனால் பேனாக்கள் சும்மா இருப்பதில்லையே?
அண்மையில் ஊர்வசியை சந்தித்தவர்கள் அதைப் பற்றிக் கேட்க ரவுத்திரம் பழகி விட்டார் ஊர்வசி ரத்தேலா!
“அப்படி எதுவும் நடக்கவில்லை. தப்பாக தொடவும் இல்லை.படம் எடுத்த ஆங்கிள் அப்படி இருந்திருக்கிறது. போனிகபூர் எடுத்த படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் அஜித் நடித்த படத்தில் என்னை நடிக்க அழைத்தார். தேதிகள் இல்லாததால் நடிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் எனக்கு அந்த நடிகருடன் ரிலேஷன்ஷிப் இருக்கவில்லை என்று எழுதுவீர்களா?” என தேளாக கொட்டிவிட்டார்.