இந்தப்படத்தில் இருப்பவர்கள் யாருமே இன்று இந்த நில உலகில் இல்லை.
அமரர்களாகி விட்டார்கள்,அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய அற்புத மனிதர்கள்.
கால் மீது கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருப்பவர் அமரர் ஜெமினி வாசன். அருகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பேசிக்கொண்டு இருப்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன்.எஸ்.எஸ்.ராஜேந்திரன்,தயாரிப்பாளர் சுப்பிரமணியம்,
அரியப் புகைப்படம்.
மூவரைப் பற்றியும் நிறையச்செய்திகள் இருந்தாலும் வாசனைப் பற்றிய அரிய தகவலை சொன்னார் நடிகர் ராஜேஷ். விரல் நுனியில் திரை உலகம் பற்றிய விவரங்கள் வைத்திருப்பவர். பலரது அந்தரங்கம் தெரிந்தவர்.
வாசனின் 60 ஆவது பிறந்த நாள் அன்று வட இந்திய சூப்பர் ஸ்டார், சோக நடிப்பில் மன்னன் என அழைக்கப்பட்ட திலீப்குமார் சென்னைக்கு வந்து அறுபது பொற்காசுகளை வெல்வெட் முடிச்சில் வைத்து வழங்கி ஆசி பெற்று சென்றாராம்..