
“யப்பு…களத்தில எறங்கிட்டம்ல. !வக்காளி கோதாவ்ல எறங்கிறதுக்கு எந்த பயலுக்கு தைரியம் இருக்கு. தொடை தட்டி சவால் விடச்சொல்லு .பாக்கிறன் ஒத்தைக்கு ஒத்தை! கெரண்ட காலு நரம்பு அந்து போயிரும்பு .சொல்லி வையி ” என்று மதுரைக்குள்ள சர்வசாதாரணமா பேச்ச கேக்கலாம்.
“இந்தா இங்கன வந்துட்டம்ல ! ” என ரடான் நிறுவனம் “பிறந்தாள் பராசக்தி” என்பதை அறிவித்திருக்கிறது.
புரட்சி கலைஞர் சரத்குமார்,கலையரசி ராதிகா ,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கிற அந்த படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது .
கலைஞர் கருணாநிதியின் பராசக்தியை அடுத்து அந்தப் பெயரில் தயாராகிற படம். அந்த முன்னோட்டம் பார்ப்பதற்கு மட்டும்தான் என்கிற அறிவிப்பும் அதில் இருக்கிறது.
கிடா சண்டையை வைத்து கதை பண்ணியிருப்பார்கள் போல.
தெக்கித்தி வாசம்.
“நீ அடிக்கிற ஒவ்வொரு அடியும் வரலாறா இருக்கணும்.தென்மாவட்டத்தில நம்ம குடும்பத்த எதுக்கிறதுக்கு எவனும் கனவு கூட காணக்கூடாது ” -இது ராதிகா சொல்ற வசனம். ( அரசியல் இருக்குல்ல !)
“குத்தனும்னு காத்திட்டிருக்கிறது நெசம்தான்.!நெஞ்ச காட்றதா முதுக காட்றதாங்கிற முடிவு பண்றது நாந்தான்” ( இதிலயும் வில்லங்கம் இருக்கிற மாதிரி தெரியிதில்ல.) இது சரத்குமார் பேசுற வசனம்.
ஆக இந்த பராசக்தியில பெரிசா மறஞ்சு இருக்கு.












