விஜய் டி.வி.யின் போட்டி முடிவுகள் பெரும்பாலும் நியாயமாக இருப்பதில்லை நீதியை ஆசனத்தின் மீது போட்டுக் கொண்டு அதன் மேல் அமர்ந்திருந்து ராஜ பரிபாலனம் செய்கிறார்கள்.
பிக்பாஸ் என்பது எழுதிவைத்துக் கொண்டு அதன்படி நீங்கள் எக்கேடாவது கெட்டு ஒழியுங்கள் என்று நடிகர்களை விட்டு விடுவது போன்றுதான் அதன் ரியால்டி ஷோ அமைந்திருக்கின்றது..அந்த டிவியில் ஒளிபரப்பாகும் போட்டிகளின் முடிவுகள் சூப்பர் சிங்கர் உள்பட நேர்மையுடன் இருந்ததில்லை.
பிக்பாஸ் மட்டுமா நேர்மையுடன் நடக்கப்போகிறது?
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தொடக்கத்தில் பெண்களைப் பற்றி அவ்வளவு கரிசனமாக பேசும்போதே தெரிந்து விட்டது.அன்றைய பலி ஓர் ஆண் என்பது.
போட்டியில் இரண்டு ஆண் இரண்டு பெண் இருக்க வேண்டும் என்பதற்காக தர்ஷனை காவு கொடுத்து அனுப்பி வைத்து விட்டார்கள்.
கமலுக்கே பிடிக்கவில்லை என்பதை அவரது பின்னுரை தெளிவாக உணர்த்தியது.
“எனக்கே புரியவில்லை.என்ன செய்வது ஓட்டிங் பேட்டர்ன் அப்படி இருக்கிறது” அவர் சொன்னதை ஆழ்ந்து கவனித்திருந்தால் புரிந்திருக்கும்.
ஷெரின் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுதான் ஹைலைட்.
திரைப்படங்களில் இந்தளவுக்கு அவர் நடித்திருந்தால் ஓரம் கட்டியிருக்க மாட்டார்கள்.
அதாவது தர்ஷன் மீது அவருக்கு அவ்வளவு காதல் என்பதைக் காட்டுவதற்காகவா அந்த பொய்யான அழுகை?
இனி ஆங்கிலம் தலைவிரித்தாடும்.
பிக்பாஸ் முடிவு செய்து விட்டால் அதில் மாற்றம் இருக்காது என்பதை ஷெரின் நன்றாக அறிந்திருந்தும் அந்த பதக்கத்தை தர்ஷனை வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதால் தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட்டு விடுமா?
பிக்பாஸ் வாக்காளர்கள் என்பது விஜய் டிவியின் கையாட்களா அல்லது பொம்மைகளா அல்லது போலியான எண்ணிக்கையா?
தெரியவில்லையே மாமு!