
போலியாக ஷெரினுடன் காதல் நாடகமாட முடியாது என மறுத்து விட்டதால் தர்ஷனை பிக்பாஸ் வஞ்சம் வைத்து வெளியேற்றி விட்டதாக சொல்கிறார்கள்.
தர்ஷனை காதலிப்பது மாதிரி கடிதம் எழுத வைத்தனர்.ஷெரினும் எழுதி கிழித்தார்.வெறும் நடிப்புத்தானே!
ஆனால் தர்ஷன் விளையாட்டுக்காகக் கூட தன்னுடைய உண்மையான காதலி சனம் ஷெட்டிக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
ஆகவே மக்கள் ஆதரவுகள் இருந்து பிக்பாஸ் வெளியேற்றி விட்டது என்கிறார்கள். வெளியேறிய தர்ஷன் சிறு கவலை கூட இல்லாமல் சனம் ஷெட்டியிடம் எல்லா மேட்டரையும் சொல்லி விட்டாராம்.
சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் மீது வருத்தம் நேர்மையாக உண்மையாக விளையாடியவரை வெளியேற்றி விட்டீர்களே என.!
மகிழ்ச்சியான செய்தியும் இருக்கிறது. எப்ப வருவார் என காத்திருந்ததைப் போல தர்ஷனுக்கு லிப்ரா புரோடக்ஷனின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதான் காதலி சனம் ஷெட்டியுடன் வெற்றி சின்னம் காட்டுகிறார்.












