எத்தனையோ இம்சைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக ஓடிய படம் தேவர் மகன்.
சாதிய வண்ணம் பூசினாலும் மக்கள் அதை ஒப்புக் கொண்டார்கள். தேவர் என்கிற பெயரே கூடாது என்று கலவரம் செய்தனர்.
நடிகர் திலகம், உலகநாயகன் ,இசை ஞானி மூவரும் இணைந்து பணியாற்றிய படம்.
“தேவர் மகன்.2 படம் எடுக்க விரும்புவதாக “ஒரு முறை கமல்ஹாசனே சொல்லி இருந்தார். இந்தியன் 2,முடிவதற்கே எத்தனை மாதங்கள் ஆகுமோ தெரியவில்லை. அதன் பிறகு இன்னொரு படம் இருக்கிறது இதை முடித்து விட்டுத்தான் அவர் தேவர் மகன் 2 வை தொட முடியும்.
இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய போது “தேவர் மகன்.2 வுக்கான கதை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே உருவாகிவிட்டது. இது பற்றி கமல் சாரிடம் பேச முடியவில்லை. வெளியில் வந்த பின்னரும் சந்திக்க இயல வில்லை. கதைக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது,கமல் சார் ஓ கே சொன்னால் இயக்க நான் ரெடி “என்றார் இயக்குநர் சேரன்.