ஒரு வங்கி விளம்பரத்தில் மிகவும் இளைத்துக் காணப்பட்ட ரானாடகுபதியைப் பற்றி கவலைப்படாதவர்கள் எவருமே இல்லை.
“என்னாச்சு பல்வால்தேவருக்கு ?”
“ஏன் சீக்காளி மாதிரி இருக்கிறீர்கள்?”
“உடம்புக்கு என்ன?”
இப்படி எக்கச்சக்கமாக விசாரிப்புகள். எல்லாமே அவருக்கு சிறுநீரகக் கோளாறு எனப் பரவி இருந்ததின் வீரியம்தான்.!
பதில் அளித்திருக்கிறார் ரானா .
“நீங்கள் கவலைப்படுவது மாதிரி எதுவும் இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன் நலமாகவே இருக்கிறேன். கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை.முழு ஆரோக்கியமாக இருக்கிறேன்.” என்பதாக சொல்லி இருக்கிறார்,