விட்டா பச்சை பச்சையா பேசுவார் போல!
மீரா மிதுன் என்கிற கவர்ச்சி நடிகைக்கு பிக்பாஸ்காரர்கள் காலில் சலங்கையை கட்டி விட்டார்கள். சும்மா கிடந்த பூனையின் நகங்களை கூர் தீட்டி விட்டால் என்ன நடக்கும்?
எல்லோரையுமே பாய்ந்து பிராண்டி விடும்.!
அதுதான் இப்ப நடக்கிது.!
அபிராமிக்கும் மீராவுக்கும் என்ன பகையோ ,எதில பிரச்னையோ தெரியல.
அபிராமியை கடுமையாக எச்சரித்திருக்கிறார் மீரா!
“த பாரு.இந்த மட்டமான ஸ்டண்ட் வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே.!நாறடிச்சிருவேன்.!இதுக்குப் பிறகும் எங்கிட்ட வாலாட்டாதே! என்னோட கருணையால்தான் உன் கச்சேரியே நடக்கிறது.!
என்னை அட்டாக் பண்றதுக்கு காசு கொடுத்து எழுத வைக்கிறே! உனக்கு என்னோட பாலோயர்ஸ் பத்தி தெரியும்ல. வெறுப்புல பொசுங்கிடுவே!” என்று எச்சரித்திருக்கிறார்.