போகிற போக்கைப் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அரசியலுக்கு வருகிற ஆசையே இல்லை என்றுதான் தோன்றுகிறது.!
ரசிகர்களை அரசியல் என்கிற மந்திரக்கயிறால் கட்டிப்போட்டு அவர்களை சிதற விடாமல் பாதுகாத்து வருகிறாரோ என்னவோ?
இதோ அவரது புதிய பட அறிவிப்பு வந்து விட்டது. ‘தலைவர் 168’ என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவாதான் இயக்கம். இன்னும் இதர டெக்னிஷியன்களின் பட்டியல் வெளியாகவில்லை.
இப்படி தொடர்ச்சியாக படங்களை ஒப்புக் கொள்வதைப் பார்த்தால் பில்டப் மாதிரி தெரிகிறது. ஒருவேளை சட்ட பேரவைத் தேர்தல் தள்ளிப் போகும் என நினைக்கிறாரோ ,என்னவோ!
சரி சரி வந்ததை வரவில் வைப்போம்.மற்றதை பிறகு பார்ப்போம்.