பிரபல தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரித்விக் வம்சி என்கிற பையன் இருக்கிறான்.
கணவருடைய இயக்கத்தில் ரம்யா நடித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஸ்ரீ ஆஞ்சநேயம் என்பது கடைசியாக நடித்த படத்தின் பெயர்.
தற்போது வந்தே மாதரம் என்கிற பெயரில் கிருஷ்ண வம்சி ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ,இந்த படத்தில்தான் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். பிரகாஷ்ராஜ் நடிப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. இது குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.