சும்மா கிடந்த ஓநாயை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுன குடியானவன் கொஞ்ச நாள் கழிச்சு கோழியைக் காணோம் ,ஆட்டுக்குட்டியைக் காணோம்னு புலம்புனானாம் .அது மாதிரி சொந்த லாபத்துக்காக விஜய் டிவி பிக் பாஸ் மீரா மிதுனை கொண்டு வந்து ஆட்டம் காட்டி ஆதாயம் பாத்துச்சு.
இப்ப அதுக்கே மீரா மிதுன் ஆட்டம் காட்டுறார்.
இந்த கவர்ச்சி நடிகை மீது ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய முயன்றதாக புகார் இருக்கு. மோசடி புகார் இருக்கு. இவ்வளவு இருந்தும் கமல்ஹாசன்,கவின், சேரன் மீது பலவாறான புகார்களை சொல்லி வந்தார்.
தற்போது எழும்பூர் பெண் போலீஸ் அதிகாரி மீது புகார் சொல்லி போலீஸ் துறையே சரியில்லை.என்பதாக டிவீட் பண்ணி அதை பிரதமர் மோடிக்கே டாக் பண்ணியிருக்கிறார். சட்டம் ஒழுங்கை பராமரிக்க தெரியவில்லை என்பதாக சொல்கிறார் மீரா மிதுன்.