இந்தியன் 2 படத்தின் வேலைகளை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டத்தின் இமேஜ் குறைந்து விடாமல் இருப்பதற்கு ஒவ்வொரு காட்சியிலும் மெனக் கேட்டுவருகிறார் என்கிறார்கள்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு.போபாலில்! அதாவது நச்சு வாய் வெளியேறி லட்சக்கணக்கில் மக்கள் இன்றளவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களே அதே ஊரில் படப்பிடிப்பு நடத்த திட்டம்.
நாற்பது கோடியில்! பீட்டர் ஹெயின் மாஸ்டர் முரட்டுத்தனமாக காட்சிகளை அமைத்திருக்கிறாராம்
இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் 9 0 வயது முதியவராக நடித்து வருகிறார்.
“எவ்விதமான பாரபட்சமும் காட்டாமல் காம்பரமைஸ் பண்ணிக் கொள்ளாமல் காட்சிகள் இருக்க வேண்டும் என்று என்னிடம் கமல் சார் சொல்லியிருக்கிறார்” என்கிறார் பீட்டர் ஹெயின்.
அடுத்த ஷெட்யூல் தைவான்,அப்புறம் ஐரோப்பா என திட்ட மிடப்பட்டிருக்கிறது.