கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு மும்பை நானாவதி மருத்துவ மனையில் இந்தியாவின் உச்ச நடிகர் அமிதாப் பச்சன் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கென சிறப்பு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
“இது வழக்கமான செக் அப் தான் “என்கிறது மருத்துவமனை வட்டாரம்
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூலி படத்தின் படப்பிடிப்பில் கடுமையான விபத்தினை சந்தித்தார். அப்போது அவருக்கு அவசரமாக ரத்தம் செலுத்தப்பட்டது .அதில் ஹெபட்டிடிஸ் பி வைரஸ் எப்படியோ கலந்திருந்து அவரது கல்லீரலை கடுமையாக பாதித்து விட்டது.
இதை அமிதாப் பச்சனே தனது கல்லீரல் 25 சதவீதம் தான் செயல் படுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்.தற்போது அதன் தொடர்ச்சியாகத்தான் சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.