
அறிவுரை சொல்வது என்பது பலரும் விரும்பாத செயலாகி விட்டது.
கவின்-லாஸ்லியா இருவருக்கும் அது பொருந்தும்.
சேரன் மனம் நொந்து சொல்லியிருப்பதை படியுங்கள் புரியும்.!
“கவின்- லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை.
இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.
என் ப்ரச்னைக்கு வரவேண்டாம்.
கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு.. உங்களுக்கு பிடித்தவர்களை பிக் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை..
நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.
தகாத வார்த்தைகளால் பேசுவதால் ப்ரச்னை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை..
நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை.
நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.” என்கிறார் சேரன்.
அவர் எத்தனை காதலர்களைப் பார்த்தவர். காதல் படங்களை எடுத்தவர்,இன்னும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் பிக் பாஸ் என்கிற புதை சேற்றுக்குள் கால் வைத்தபோதே எத்தனையோ நல் உள்ளங்கள் எடுத்துச்சொன்ன அற உரைகளை அவரால் கேட்க முடியாது போயிற்று.
காதல் என்கிற பெயரால் இச்சைகளை முன்னிலை படுத்துகிற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறபோது கவின்-லாஸ்லியா சிக்கலைப் பற்றி பேசுவது சேரனுக்கும் அழகல்ல.
அவர்களது ஆர்மி அவர்களைப் பார்த்துக் கொள்ளும்.!!!!












