மஞ்சிமா மோகன். ஈடு தாடான வாளிப்பான நடிகை.
அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். பார்வையாலேயே மனிதனை வீழ்த்தும் ஆற்றல் படைத்த கண்கள் அவருக்கு.!
அற்புதமான நடிகை.
ஒரு விபத்தில் சிக்கி காலில் முறிவு. கட்டாய ஓய்வில் ஒரு மாதம் படுக்கையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
இந்த விபத்து பற்றி இன்ஸ்டராகிராம் பக்கத்தில் ‘வாக்கருடன்’படத்தை பகிர்ந்திருக்கிறார்.
“ஒரு சில வாரங்களுக்கு முன்னர் என்னுடைய வாழ்வில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக காலில் சிறிய அறுவைச்சிகிச்சை. தொடர்ந்து ஒரு மாதம் படுக்கையில்!
நீங்கள் சந்தித்த கடுமையான அனுபவம் எது என்று என்னிடம் முன்னர் கேட்டிருந்தால் அப்படி எதுவும் இல்லை என்பதாகவே சொல்லியிருப்பேன். ஆனால் இந்த விபத்து ?
கடுமையான அனுபவமே!
ஆனால் இதுவும் நல்லதற்கே. என்னை மன வலிமை உள்ளவளாக மாற்றி விட்டது!” என்பதாக சொல்லி இருக்கிறார்.