இந்த வட இந்திய நடிகைகளில் சிலருக்கு மேலாடை விலகுதல் ,அல்லது மார்பகம் தெரிய போஸ் கொடுத்தல் என்பது ஒன்றும் அநாகரீகம் இல்லை. அது மேற்கத்திய கலாசாரத்துடன் கலந்து விட்ட நவீன நாகரீகம்.!
ஆனால் அதே வட இந்திய நடிகைகள் தென்னகம் வந்து விட்டால் இடத்துக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்வார்கள். அது அவர்களது பழக்கம். இதே நடிகைகள் மேலை நாட்டுக்கு சென்றுவிட்டால் பிகினியில் தங்களின் திரண்ட அங்கங்களை காட்டுவதற்கு அஞ்சுவதில்லை. அதில் தில்லாக இருப்பார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ஸ்ரேயா சரண் ருஷ்ய நாட்டைச்சேர்ந்த ஆண்ட்ரே கொர்சவ் என்பவருடன் வாழத் தொடங்கினார். திருமணம் நடந்ததா ,இல்லியா,என்பதை அவர் சொல்லவில்லை.கல்யாணம் என்பது ஒரு பிரச்னையே இல்லை.
நேற்று இரவு மும்பையில் பட அதிபர் ரமேஷ் தவுஹான் தீபாவளி விருந்து கொடுத்தார்.
அந்த விழாவுக்கு தனது கணவருடன் ( ? ) சென்றிருந்தார் ஷ்ரேயா .
சாதாரணமாகதான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்கள் தங்கள் கேமராவில் ஒன்றிரண்டு படங்களுடன் நின்று விட்டார்கள்.
ஆனால் யாருமே எதிர்பாராத நிலையில் ஆண்ட்ரேவின் கையைப் பற்றி அழுத்தமுடன் பற்றிக் கொண்டு உதடுகளில் அழுந்த முத்தம் கொடுத்து விட்டார் .எதற்காக அந்த முத்தம் அந்த இடத்தில்?
அதிர்ந்து போனார்கள். இந்த எதிர்பாராத முத்தம் சிலரது கேமராக்களுக்குமே மட்டுமே விருந்தாக கிடைத்தது.