போற போக்கைப் பார்த்தால் திடீரென விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு மணமக்களாக வந்து நிற்பார்கள் போலிருக்கிறது.
அத்திவரதர் தரிசனம் செய்தார்கள். அவர் தண்ணீருக்கடியில் சேர்ந்த பிறகு தற்போது திருப்பதிக்கு சென்று விஷ்ணுவின் 3 4 ஆவது பிறந்தநாள் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்கள்.
நயன்தாரா ஆசாரமான கிறித்துவ பிரிவை சேர்ந்தவர் .
அவர் பிரபுதேவாவுடன் குடும்பம் நடத்திய போதே இந்து மதத்தில் சேர்ந்து விட்டதாக ஒரு தகவல் உண்டு. தியாகராயநகரில் இருக்கும் ஆர்யா சமாஜில் மதம் மாறினார் என்பதாக சொன்னார்கள்.
அது நிஜமா இல்லையா என்பது நயன் சொன்னால்தான் தெரியும்.
பிற மதத்தவர் அனுமதிக்க மாட்டார்கள் என நிபந்தனையுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கிற திருப்பதி தேவஸ்தானம் எந்த அடிப்படையில் நயனை அனுமதித்தது என்பது தெரியவில்லை. காவிக் கட்சியினர் என்ன சொல்கிறார்கள்?