எப்படியெல்லாம் தயாரிப்பாளர்கள் அவதிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது?
விஜய் நடித்த பிகில் படம் வசூலில் ரிக்கார்ட் செய்திருந்தாலும் சிலபல குறைகளுக்காக டைரக்டர் அட்லி மீது தயாரிப்பு நிறுவனம் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பது அதிகம் அதை குறைக்கவேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேட்டிருந்ததாகவும் அதை அட்லி ஒப்புக் கொள்ள வில்லை என்பதே கோபத்துக்கு காரணம் என்கிறார்கள்.
பொதுவாக எல்லோருடைய கருத்தும் படத்தின் நீளம் அதிகம் என்பதுதான் .அதிலும் முற்பாதியில் சலிப்படையச் செய்யும் வகையில் காட் சிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
இதைப்போல தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடிகர் விஜய் கோபத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். தமிழகம் முழுவதும் தயாரிப்பு நிறுவனத்தை படத்தை ரிலீஸ் பண்ணச் சொன்னதாகவும் ஆனால் அதை கேட்காமல் அவர்கள் பலருக்கு படத்தை கொடுத்து விட்டதால் சில இடங்களில் ரிலீசில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.இதனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மீது விஜய்க்கு கோபம் என்றும்சொல்கிறார்கள்.
எப்படியானால் என்ன படம் இன்று வரை ரெக்கார்ட் கலெக்சனில்தான் போய் இருக்கிறது.
செவ்வாய்க்குப் பிறகுதான் கலெக்சனின் சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.