தீபாவளிக்கு வந்த படங்களில் கார்த்தியின் ‘கைதி ‘படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் .
இவரது இயக்கத்தில்தான் விஜய் நடிக்கவிருக்கிறார். அதற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயரிட்டிருக்கிறார்கள்.
விஜய்யின் நெருங்கிய உறவினர் பிரிட்டோதான் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆனால் அந்த செய்தி அதிகார பூர்வமானது இல்லை என சொல்கிறார்கள்.வேறு சில நடிகைகளிடம் பேச்சு நடந்துவருவதாக சொல்கிறார்கள்.