தீபாவளி ரேஸில் விஜய் படத்துடன் மோதிய ஒரே படம் கார்த்தியின் கைதி தான்!
இந்த படத்தில் காதல் இல்லை, காமடி நடிகர் யாரும் இல்லை,பிரமாண்டம் எதுவும் இல்லை. கதாநாயகியாக எவரும் கிடையாது . கார்த்தியும் கதையும் தான் வெயிட் என்கிற நிலையில் தயாரான படம். முழுவதும் இரவில்தான் எடுக்கப் பட்டிருக்கிறது.
கைதியின் இரண்டாம் பாகம் கதையும் ரெடி என்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.இந்தப்படம் இதுவரை 18 கோடி வசூல் செய்திருக்கிறது. 25 கோடி வந்தாலே போதும் என்பது இலக்கு . அதை இந்த வாரத்தில் எட்டி விடும் என்கிறார்கள்.