சுடுகாட்டுக்கு போனாலும் எங்கேயாவது எலும்பு கிடைக்காதா என்று தேடுகிற திருட்டுப் புத்தி இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
என்ன பண்றது ?
கண்டிப்பார் எவரும் இல்லை. கழுதை ஊர் மேய்கிறது என்கிற கதையாகிப் போச்சு !
சென்னை மால் தியேட்டரில் கைதி பார்த்துக் கொண்டிருந்தார் ஜான். இவர் திரைஉலகப் புள்ளி.பல படங்களுக்கு பொதுமக்கள் தொடர்பு அதிகாரி. நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானுக்கு திரை உலக தொடர்பு அதிகாரி. இவரது பார்வையில் படுகிற அளவுக்கு உட்கார்ந்திருந்த ஒருவர் செல்போனில் படத்தைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
சும்மா இருக்க முடியுமா? அந்த ஆளை “படம் பிடிக்காதீங்க” என்று தடுத்திருக்கிறார்.
அந்த ஆள் எகிறி இருக்கிறார்.
இடை வேலையின் போது வெளியில் வந்த பி.ஆர்.ஓ.ஜானிடம் திருட்டுத்தனமாக படம் பிடித்தவரும் அவருடன் வந்தவர்களும் தகராறு செய்திருக்கிறார்கள். தியேட்டரை சேர்ந்த எவரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் கைதி படம் பார்க்க வந்திருந்தவர்களில் ஜானுடைய நண்பர்களும் வந்திருக்கிறார்கள், ஜானுக்கு இது தெரியாது.
என்ன தகராறு என விசாரிக்க அவர்கள் வந்தபோதுதான் தங்களின் நண்பர் ஜானிடம்தான் தகராறு பண்ணுகிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது.அவர்கள் மற்றவர்களின் துணையுடன் அந்த திருட்டு கும்பலை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.