
எப்படியெல்லாம் நினைக்க வேண்டியதிருக்கிறது.
தேவர்மகன் 2 இரண்டாம் பாகம்தான் ‘தலைவன் இருக்கிறான் ‘என்பதாக எடுக்கப்படப் போகிறது என ஒரு தகவல் வந்தது.
அந்த தகவலில் வடிவேலு நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அப்படியானால் முதல் பாகத்தில் நடித்திருந்த ரேவதி,கவுதமி இருவரும் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் அல்லவா!
முதல் பாகத்தில் கவுதமியை கமல் நெருக்கமாக காதலித்து முத்தம் கொடுத்திருந்தாலும் இஞ்சி இடுப்பழகா பாடுகிற வாய்ப்பு ரேவதிக்குத்தான் கிடைத்திருந்தது.
சீரியலில் பிசியாக இருந்த ரேவதியை பல நாட்களாக பார்க்க முடியவில்லை. என்ன பிரச்னையோ தெரியவில்லை. அவர் கமலுக்காக நடிக்க வரலாம். ஆனால் கவுதமி கேரக்டரில் யாரை கமல் நடிக்க வைப்பார்?
தெரியலியே சாமி.! அதிகார பூர்வமான செய்திகள் வருகிறவரை இப்படியெல்லாம் செய்திகள் வரத்தான் செய்யும்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்ன சொல்லப்போகிறார்?












