ஸ்ரீரெட்டிக்கு அக்கா மீரா மிதுன்,பிரச்னை பண்ணுவதில்!
இவரைத் தேடிப்பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நெடுநாட்கள் ஆகியும் தனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என்பதாக அந்த டி .வி.மீது இன்று புகார் பத்திரம் வாசித்தார் மீரா மிதுன்.
அந்த டி .வி.மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் சகஜம்.
“போன் செய்தால் சரியான பதில் இல்லை”என அந்த டி.வி.நிறுவனத்தின் மீது மேலும் புகார் சொன்னார்.
இன்று அவசரமாக பத்திரிகையாளர்களை சந்திக்கவேண்டிய அவசியம் என்ன?
“சென்னையில் இருக்க முடியல. நிறைய பிரச்னைகள்.போலீசில் புகார் செய்தும் பலனில்லை.லஞ்சம் வாங்கிக் கொண்டு போலீஸ் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள்.இந்த மாநிலத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை.வேறு மாநிலம் செல்ல வேண்டியதாக இருக்கிறது.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேன். எந்த கட்சியுடன் இணைந்து பாடுபடுவேன் என்பதை பிறகு அறிவிப்பேன்”என்கிறார் .
வாம்மா மின்னல்.! அப்படியே ஸ்ரீ ரெட்டியையும் கூட்டிட்டு வந்திடு. அந்தம்மாதான் கொ .பெ.செ