சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வெளிவரவிருக்கிற ‘ஆக்சன் ‘ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது நமக்கே வெட வெட ன்னு உடம்பு ஆடியது.
காமடி ,கலகலப்புன்னு போயிட்டிருந்த சுந்தர்.சி.யினால் எப்படி இப்படி மிரட்டலான ஆக்சன் படத்தை எடுக்க முடிஞ்சிது?
“என்னுடைய கனவே பிரமாண்டமான ஆக்சன் படம் எடுக்கணும்கிறதுதான். அதை தயாரிப்பாளர் ரவீந்திரன் வழியா எடுத்துட்டேன். என் கனவு நிறைவேறியிருக்கு ! ” என்கிறார் சுந்தர்.சி.
“பொதுவா நான் லைப்ல சீரியசான ஆள். நான் எத்தன படம் எடுத்தாலும் அது உன் படம் மாதிரி இல்லியேன்னுதான் கேப்பாங்க. ஹாலிவுட் படம் மாதிரி பிரமாண்டமான ஆக்சன் படம் எடுக்கணும்னு ஆசை. அது ரெண்டு பேர் உதவியினால் நிறைவேறி இருக்கு. ஒருவர் ரவீந்திரன்,இன்னொருவர் விஷால் . விஷாலைத் தவிர வேற யாரானாலும் செய்ய முடியாது.அவர் ஒருவர்தான் ஆக்சன் எதுன்னாலும் பதில் பேசாம செய்வார். குதின்னாலும் நூறு அடி உயரத்திலிருந்தும் குதிப்பார். 42 டிகிரி வெயிலிலும் படம் எடுத்திருக்கிறோம். டூப் போடாம நடிப்பவர் விஷால். இல்லேன்னா இந்த படத்தை எடுத்திருக்கவே மாட்டேன்” என்றார் இயக்குநர் .
விஷால் பேசுகையில் “எத்தனையோ ஆக்சன் படங்களில் நடிச்சிருந்தாலும் இந்த படத்தில் நடித்தபோதுதான் சாவை நேர்ல பார்த்த முதல் அனுபவம்.மறக்கவே முடியாது. ஒன்னரை டன் பைக்.வேகமா வந்து மோதி ஆக்சிடென்ட் பண்ணனும். கீழே விழுந்ததும் பைக் முகத்தில விழுகிற மாதிரி இருந்தது. அதை கைகளினால் தடுத்திட்டேன்.நடிகனுக்கு முகம்தானே முக்கியம்.அந்த சில வினாடிகள் என் சாவை நேர்ல பார்த்த உணர்வு.
பைக்ல பின்னாடி தமன்னா உட்கார்ந்திருக்கிறார்.பைக் சுலோப்பில் ஓடுது . வேகமா ஓடுது.பின்னால உட்கார்ந்திருந்த தமன்னா மெதுவா ஓட்றா ..மெதுவாடான்னு இறுக்கமா கட்டிப் பிடிக்கிறாங்க.
என்னம்மா இப்படி இறுக்கமா பிடிக்கிற… மூச்சு முட்டுதுன்னு கத்துறேன்.அந்த சீன் எவ்வளவு ரிஸ்க் என்பது எங்களுக்கு பிறகுதான் தெரிஞ்சது. தினமும் கையில காலில காயம் இல்லாம தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷா பூரி .இந்த மூணு பேரும் வந்ததில்லை.”என்றார்
கடைசியாக விஷால் சொன்னதுதான் இந்த படத்துக்கு சம்பந்தம் இல்லாதது.
“தத்தெடுத்த கிராமத்தில் செய்ய வேண்டியதை இப்பதான் ஆரம்பிசிருக்கோம். இன்னும் என்ன தடைகள் வரும்னு தெரியல. அத வேற மேடையில சொல்றேன்” என்றார். .