Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஷாலுக்கு பெண் வேஷம் போட்டால் அது அஃகன்ஷா !

admin by admin
November 9, 2019
in News
428 4
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆக்க்ஷன் பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில்  தமன்னா ,இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால் ஆகியோர் பேசியதில் எடுக்கப்பட்ட வலம்புரி சங்கு போன்ற முக்கிய கருத்துக்கள் இவை.

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நடிகை தமன்னா :

“ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன்.

பாகுபலி படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். அந்த கனவை ஆக்ஷன் படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள். என்று தான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன். விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

சுந்தர்,சி,

இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே என்று கேட்டார்கள்.. இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன்.

எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.

இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார்.

இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா? என்பது  சந்தேகம்தான். அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள்.

 மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.
தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார் “

விஷால்:

சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான்.

நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார். ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான்.

அதன்பிறகு ஒரு காட்சியில்  இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொரு இயக்குநரும்  ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும்.

ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.
எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை.

நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார்.

Tags: அகன்ஷாபுரிஆக்க்ஷன்சுந்தர்.சிதமன்னாவிஷால்
admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?