
படத்தின் ரிலீஸ் நாளில் ” என் கதையை திருடி விட்டார்கள் ”என கடைசி நேரத்தில் புகார் சொல்லுவது, “பூஜை போடும் நாளில் கரைச்சல் கொடுப்பது என்பதெல்லாம் கோலிவுட்டில் சகஜமாகி விட்டது.
ஜெயலலிதாவின் வரலாறு படமாக்கப்போகிறது என்பதை ஆளுக்காள் அனவுன்ஸ் பண்ணியபோது எதுவும் சொல்லாத தீபா தற்போது படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் “நான் தான் ஜெ.வின் வாரிசு என்னை கேட்காமல் யாரும் ஜெயலலிதாவின் கதையை படமாக்கக்கூடாது “என்று கோர்ட்டுக்குப் போயிருப்பது “ஏதோ “ஒன்றை எதிர்பார்த்துதான்”என்கிற பேச்சுக்கு இடமாகிவிட்டது. 
ஆனாலும் ஏ எல்.விஜய்யின் ‘தலைவி’ படப்பிடிப்பு தொடங்கி விட்டது. ஜெ.வாக நடிக்கவிருக்கும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட அனைவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்,இந்தி இரு மொழிகளில் படமாகிறது.
எம்.ஜி.ராமச்சந்திரனாக அரவிந்தசாமி நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அஜித் குமாரின் வலிமை தொடங்கி விட்டதால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா அங்கு சென்று விட்டாராம்.












