இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் ஏழரை வந்து இறங்கியதன் விளைவு வைகைப் புயல் வடிவேலுக்கு இடியாக அமைந்தது.
லைகா -ஷங்கர் தயாரிப்பு. சிம்புதேவன் இயக்கம் என பிரமாண்டமான அரங்கு போட்டு ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் இயக்குநர் மீது வடிவேலு புகார் சொல்ல ,சிம்புதேவனும் அவர் தரப்பு நியாயத்தை சொல்ல சிக்கல் கரகம் வைத்து ஆடியது.
ஷங்கர் எவ்ளோவ் பெரிய டைரக்டர் அவரை வடிவேலு நக்கல் அடித்தார் என்கிற தகவல் சைடு கட்டி அடித்தது. சிம்புதேவனுக்கு டைரக்ஷன் தெரியாது என்று சொன்னதாகவும் கலந்து கட்டினார்கள்.
முடிவு பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் சென்று அங்கு தடை வாங்கப்பட்டது. வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் இம்சை அரசனுக்கு கொடுத்த அட்வான்ஸ் பற்றி லைகாவுக்கும் வடிவேலுக்கும் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். வாங்கிய அட்வான்ஸுக்கு தங்களின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கலாம்,சம்பளத்தை பின்னர் முடிவு செய்யலாம் என்று பேசியிருக்கிறார்களாம். இந்த உடன்பாடு எட்டுவதற்கு கமல்ஹாசன் உதவி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக அஜித்குமாரின் வலிமை படத்தில் நடிப்பதற்கு வைகைப் புயலை அணுகியிருப்பதாகவும் ஒரு செய்தி.