திராவிட இயக்கங்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பவர்கள் கமல்,ரஜினி, விஜய் ஆகிய முப்பெரும் நடிகர்கள்.
பட்டும் படாமலும் ,தொட்டும் தொடாமலும் சாமர்த்தியமாக நடந்து கொள்பவர் அஜித்குமார்,
வாயைத் திறந்தால்தானே வம்பு. மவுனம் கலக நாஸ்தி என கம்மென இருந்து விட்டால் எவன் என்ன சொல்லப் போகிறான்?
ஒதுங்கியே நின்று வேடிக்கைப் பார்க்கிறவர் அஜித். இவருக்கென இருக்கிற ரசிகர்கள் பலம் வாலிக்கு சமமானது. எதிராளியின் பலத்தில் பாதி வந்து சேர்ந்து விடும்.
பத்திரிகைகளை மதிப்பதில்லை.
தலைவர்களைக் கண்டு கொள்வதில்லை.
பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை,
திரை உலகில் இவர் தனித்த ஆள். ஆனாலும் இவருக்கென ஸ்லீப்பர் செல்கள். முக்கிய நடிகர்களிடம்! உளவாளிகள்.!
எல்லாமே தானாகவே அமைந்தவை..
கோள் சொல்லிகள் திரை உலகில் அதிகம். அடுத்தவனை போட்டுக் கொடுத்து தனது கும்பிகளை நிறைத்துக் கொள்பவர்களைத்தான் இங்கு நம்புகிறார்கள்.
அரசியலில் இவரது கருணைப் பார்வை அதிமுகவினர் பக்கமே இருந்தது. காரணம் ஜெயலலிதா.
ஜெயாவின் மறைவுக்குப் பின் ஆதரவு நிலை தொடர்கிறதா இல்லையா என்றால் அது சசிக்கு மட்டுமே தெரியும். !
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி,கமல்,விஜய் ஆகியோர் எந்த நிலையை எடுத்தாலும் அஜித்குமார் எதிர்நிலையே எடுத்தாக வேண்டும். அது மத்திய அரசுக்கு சாதகமாக இருக்க வேண்டும் .ஆகவே இவரை அதிமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
இவர் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?
வரமாட்டார்.
பகிரங்கமாக மேடைகளில் ஏறமாட்டார். அறிக்கை வாயிலாக ஆதரவு இருக்கலாம். ஆனால் சசிகலா விடுதலை ஆன பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.