இந்தியன் 2 படத்தில் இயக்குநர் ஷங்கர் அதிரடி மாற்றம் செய்யப்போவதாக செய்திகள் கசிகின்றன.
உலகநாயகன் கமலுக்கு இணையாக காஜல் அகர்வால் 80 வயது மூதாட்டியாக நடிப்பார் என சொல்லப்பட்ட்து.
தற்போது அந்த அமிர்தவல்லி கேரக்டரில் நடிக்கப்போவது பிரியாபவானி சங்கர் என்கிறார்கள் .இது உறுதி செய்யப்படாத செய்தியாக இருந்தாலும் உண்மையான தகவலே என இண்டஸ்ட்ரியில் அடித்துச் சொல்கிறார்கள்.
என்ன காரணமாம்?
காஜலுக்கு விரைவில் கல்யாணம் நடக்கவிருக்கிறது. முகத்தில் பிராஸ்தடிக் மேக் அப் போட்டால் பக்கவிளைவுகள் வந்து விடுமோ என பயப்படுவதால் இந்த மாற்றம் என்கிறார்கள்.
தேவையற்ற பயம் என சொல்லப்பட்டாலும் அவஸ்தை மற்றவர்க்குத் தானே!